1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் நீண்டகால தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் இந்த விசேட தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று (28) பாராளுமன்றத்தில் அறிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, கறுப்பு ஜூலை சம்பவத்தின் பின்னணி மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து முழுமையான ஆய்வை மேற்கொண்டு அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதே குழுவின் முக்கிய நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல், சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இக்குழு ஆராயவுள்ளது.
இதற்கமைய, குறித்த விடயங்கள் தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கிய அறிக்கையைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் விசேட தெரிவுக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.







