Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு பாராட்டு; ஏனைய கொள்கைகள் குறித்து சந்திரிகா விமர்சனம்!

9 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அரசாங்கத்திடம் அதனைத் தவிர வேறு தெளிவான கொள்கைகள் இல்லை என விமர்சித்துள்ளார்.

இலங்கை சட்டக் கல்லூரியின் சமத்துவ முன்முயற்சியின் ‘வோர்டெக்ஸ்’ (VORTEX) ஐந்தாவது தொகுதி வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டம் சிறந்த நடவடிக்கையாக இருந்தாலும், அதற்கு அப்பால் நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கான வேறு கொள்கைகள் தென்படவில்லை என்பதே தனது விமர்சனம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு வர்க்கத்தினருக்கு எதிராக மற்றொரு வர்க்கத்தினரிடையே வெறுப்புணர்வைத் தூண்டுவதைத் தவிர அரசாங்கத்திடம் வேறு நடவடிக்கைகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் தலைமைத்துவத்தை வழங்கும் வரை காத்திருக்காமல் இளைஞர்களே தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் எவ்வாறு வாக்களிக்க முடியும் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

இலங்கை தனது முழுமையான வளர்ச்சியை அடைய முடியாமல் போனதற்கு சமூக ஏற்றத்தாழ்வுகளும், ஒருமித்த தேசத்தைக் கட்டியெழுப்பத் தவறியமையும் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாகவும் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்கள், கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் ஊடாக வலுவான மனித வளம் ஆகியவற்றைக் கொண்டிருந்த போதிலும், நாடு பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு தேசிய ஒற்றுமையின்மையே அடிப்படைக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் தொடர்பிலும் கேள்வி எழுப்பிய அவர், கடந்தகால பாராளுமன்றங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்த உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததாகவும், பலர் உயர்தரப் பரீட்சையைக் கூட பூர்த்தி செய்திருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, சமத்துவம் என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் நாட்டின் அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், சமூக ஏற்றத்தாழ்வுகளைக் களைவதே இலங்கை உண்மையான முன்னேற்றத்தை அடைவதற்கான முக்கிய வழியாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

November 28, 2026
கறுப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழு நியமனம்!
செய்திகள்

கறுப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட குழு நியமனம்!

November 28, 2026
புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய ரஷ்யா!
உலக செய்திகள்

புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அறிமுகப்படுத்திய ரஷ்யா!

November 28, 2026
கொழும்பை 5 நிமிடங்களில் சென்றடைய புதிய மேம்பால அதிவேக நெடுஞ்சாலை!
செய்திகள்

கொழும்பை 5 நிமிடங்களில் சென்றடைய புதிய மேம்பால அதிவேக நெடுஞ்சாலை!

November 28, 2026
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; டிசம்பர் 2 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!
செய்திகள்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை; டிசம்பர் 2 நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

November 28, 2026
பல மாகாணங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

November 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.