Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அனோஜன் போலவே மத்திய கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களையும் மீட்க வேண்டும்; ரவூப் ஹக்கீம்

அனோஜன் போலவே மத்திய கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களையும் மீட்க வேண்டும்; ரவூப் ஹக்கீம்

39 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போர் மோதல்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைத் தமது கையடக்கத் தொலைபேசிகளில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வெளிநாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இவ்வாறான குற்றச்சாட்டுகளின் கீழ் சில இலங்கையர்கள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சவூதி அரேபியாவில் மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்கொண்ட இலங்கையர் அனோஜன் சிவராசாவை மீட்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளைப் போன்று, ஏனைய இலங்கையர்களையும் மீட்டு நாட்டுக்கு அழைத்து வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு உதாரணமாக, சம்மாந்துறையைச் சேர்ந்த செல்லத்துரை ஜாமிஉல் அல்பர் என்பவர் கடந்த மார்ச் மாதம் முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அஜ்மான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான தாக்குதல்கள் தொடர்பான சில புகைப்படங்களைத் தனது தொலைபேசியில் வைத்திருந்தமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, வெளிநாடுகளில் இவ்வாறான குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைவாசம் அனுபவித்து வரும் இலங்கையர்களின் நிலைமைகள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி, அவர்களை மீட்பதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரச பல்கலைக்கழக ஊழியர்கள் டிசம்பர் 1, 2ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஊழியர்கள் டிசம்பர் 1, 2ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு!

November 29, 2026
சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள்; ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!
செய்திகள்

சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள்; ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!

November 29, 2026
50 இலட்சம் வாகனங்களை இறக்குமதி செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் சாதனை
செய்திகள்

50 இலட்சம் வாகனங்களை இறக்குமதி செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் சாதனை

November 29, 2026
தென்கொரியாவில் லொறியின் கூரைப் பகுதி மோதியதில் இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு
செய்திகள்

தென்கொரியாவில் லொறியின் கூரைப் பகுதி மோதியதில் இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

November 29, 2026
பிரபாகரன் மற்றும் திலீபன் படங்களைப் பகிர்ந்தமை தொடர்பில் மன்னார், முல்லைத்தீவில் பலர் கைது
செய்திகள்

பிரபாகரன் மற்றும் திலீபன் படங்களைப் பகிர்ந்தமை தொடர்பில் மன்னார், முல்லைத்தீவில் பலர் கைது

November 29, 2026
வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர் தெரிவு டிசம்பர் 18ஆம் திகதி!
செய்திகள்

வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர் தெரிவு டிசம்பர் 18ஆம் திகதி!

November 29, 2026
Next Post
சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள்; ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!

சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள்; ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு