Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இத்தாலிப் பாடசாலைகளில் புர்கா, நிகாப் அணியத் தடை – பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!

இத்தாலிப் பாடசாலைகளில் புர்கா, நிகாப் அணியத் தடை – பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றம்!

20 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஐரோப்பிய நாடான இத்தாலியில் பாடசாலைகளில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடைசெய்யும் சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, சட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தலைமையிலான அரசாங்கம் கடந்த செப்டெம்பர் மாதம் இந்தத் தடையை அறிவித்திருந்தது.

இதற்கமைய, செப்டெம்பர் 24ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட அவசரச் சட்டம், நவம்பர் 19ஆம் திகதி செனட் சபையிலும், நவம்பர் 26ஆம் திகதி பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேற்றப்பட்டது.

நவம்பர் 27ஆம் திகதி சட்டமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நடைமுறையின்படி, பாடசாலைகளில் முகத்தை அடையாளம் காண முடியாத வகையில் மறைக்கும் புர்கா, நிகாப் உள்ளிட்ட ஆடைகளை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை மீறுவோருக்கு 200 முதல் 1,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும். சிறுவர்கள் இந்த விதிமுறையை மீறினால் அவர்களின் பெற்றோருக்கே அபராதம் விதிக்கப்படும்.

மருத்துவம் உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்கான விதிவிலக்குகளும் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த நடைமுறை 2027–2028 கல்வியாண்டில் அமுல்படுத்தப்படவுள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகள் கட்டாயப்படுத்தப்பட்டு முகத்தை மறைப்பதைத் தடுப்பதும், பாடசாலைகளில் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பை உறுதிப்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் எனப் பிரதமர் மெலோனி தெரிவித்துள்ளார்.

இத்தாலியின் மொத்த சனத்தொகை சுமார் 5.89 கோடியாகும். 2021ஆம் ஆண்டின் மதிப்பீட்டின்படி, அந்நாட்டு மக்களில் 74.5 சதவீதமானோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், 15.3 சதவீதமானோர் மதநம்பிக்கையற்றவர்கள், 4.1 சதவீதமானோர் ஏனைய கிறிஸ்தவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், 3.7 சதவீதமானோர் முஸ்லிம்கள் மற்றும் 2.2 சதவீதமானோர் ஏனைய மதங்களைப் பின்பற்றுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு முகத்துவாரம் ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கிய இளைஞன்; இரண்டு மணித்தியாலமாக தேடுதல் பணிகள் தீவிரம்!
காணொளிகள்

மட்டு முகத்துவாரம் ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கிய இளைஞன்; இரண்டு மணித்தியாலமாக தேடுதல் பணிகள் தீவிரம்!

November 29, 2026
அரச பல்கலைக்கழக ஊழியர்கள் டிசம்பர் 1, 2ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

அரச பல்கலைக்கழக ஊழியர்கள் டிசம்பர் 1, 2ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பு!

November 29, 2026
சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள்; ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!
செய்திகள்

சம்மாந்துறை ஹிலால் பள்ளிவாசலை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகள்; ஆறு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன!

November 29, 2026
அனோஜன் போலவே மத்திய கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களையும் மீட்க வேண்டும்; ரவூப் ஹக்கீம்
செய்திகள்

அனோஜன் போலவே மத்திய கிழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களையும் மீட்க வேண்டும்; ரவூப் ஹக்கீம்

November 29, 2026
50 இலட்சம் வாகனங்களை இறக்குமதி செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் சாதனை
செய்திகள்

50 இலட்சம் வாகனங்களை இறக்குமதி செய்து ஹம்பாந்தோட்டை துறைமுகம் சாதனை

November 29, 2026
தென்கொரியாவில் லொறியின் கூரைப் பகுதி மோதியதில் இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு
செய்திகள்

தென்கொரியாவில் லொறியின் கூரைப் பகுதி மோதியதில் இரு இலங்கைத் தொழிலாளர்கள் உயிரிழப்பு

November 29, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு