2026ஆம் கல்வியாண்டின் மூன்றாம் தவணைப் பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடையும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
இன்று (29) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
‘டித்வா’ அனர்த்தம் காரணமாக இவ்வாண்டுக்கான பாடசாலை நாட்கள் 197 இலிருந்து 186 ஆகக் குறைந்துள்ளதால், மேலும் பாடசாலை நாட்களைக் குறைக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை (30) வழமையான பாடசாலை நாளாகச் செயற்படும் எனவும், திட்டமிடப்பட்ட பரீட்சைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மாற்றமின்றி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மாணவர்களும் பெற்றோர்களும் வழமைபோல் பாடசாலை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.







