Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம்!

இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம்!

3 years ago
in செய்திகள்

சீன அரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த 02 ஆம் திகதி முதல் நாடெங்கும் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

சிறிய அளவிலான கடற்றொழிலாளர்களுக்கு இரு கட்டங்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றன.

15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, நேரடியாக கடற்றொழிலில் ஈடுபடும் 29,057 OFRP மற்றும் MTRB மீன்பிடி படகுகளுக்கு இவ்வாறு இரண்டாம் கட்டத்தில் மண்ணெண்ணெய் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் பாணந்துறை கடற்றொழில் துறைமுகத்தில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா மற்றும் இலங்கைக் சீனத் தூதுவர் கீ ங்ஹொங் (Qi Shenhong) ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

சீனக் குடியரசினால் உதவி அடிப்படையில் 4.5 மில்லியன் லீற்றர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டதுடன் அதன் சந்தைப் பெறுமதி 1080 மில்லியன் ரூபாவாகும்.

அதன் பிரகாரம் முதல் கட்டத்தில் கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, தங்காலை, கல்முனை, மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய 15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, நேரடியாக கடற்றொழிலில் ஈடுபடும் வெளிப்புறம் இயந்திரம் பொருத்தப்பட்ட 24,341 OFRP மற்றும் MTRB மீன்பிடி படகுகளுக்கு 96 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்பட்டதுடன் முதல் கட்டத்தில் படகொன்றுக்கு தலா 75 லீற்றர் அடிப்படையில் 1,825,575 லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் கட்டத்தில் படகொன்றுக்கு 78 லீற்றர் வீதம் வழங்கப்படுவதுடன் ஒரு மீன்படகிற்கு 37,026 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.

நாட்டிலுள்ள 15 கடற்றொழில் மாவட்டங்களிலுள்ள 97 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக இவை விநியோகிக்கப்படவுள்ளன. இவ் எரிபொருள் விநியோகத்திற்காக அரசாங்கம் 60 மில்லியன் ரூபாவை செலவிடவுள்ளது.

இதன் பிரகாரம், கொழும்பு 405, களுத்துறை 455, காலி 816, மாத்தறை 1057, அம்பாந்தோட்டை, 1050, கல்முனை 1129, மட்டக்களப்பு 1851, திருகோணமலை 3937, கிளிநொச்சி 1169, யாழ்ப்பாணம் 5952, மன்னார் 3070, முல்லைத்தீவு 1523, புத்தளம் 3145, சிலாபம் 1993, கம்பஹா 1565, என்ற அடிப்படையில் 15 கடற்றொழில் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட, 29057 மீன்பிடிப் படகுகளுக்கு இரண்டாம் கட்டத்தில் மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில் மண்ணெண்ணெய் கிடைக்காத படகு உரிமையாளர்களின் கோரிக்கைகளின் பிரகாரம் இரண்டாம் கட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
சினிமா

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு
செய்திகள்

யால தேசிய வனத்தின் இரண்டு வலயங்களுக்கு பூட்டு

September 7, 2026
அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!
செய்திகள்

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது!

September 7, 2026
கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்
செய்திகள்

கோயில்கள், பள்ளிவாசல்களுக்கு அருகில் மாட்டிறைச்சி கழிவுகள் வீசப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்; செ. நிலாந்தன்

September 7, 2026
குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை
செய்திகள்

குடும்ப வைத்தியரின் பரிந்துரை இல்லாமல் இனி வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியாது; வருகிறது புதிய நடைமுறை

September 7, 2026
தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
Next Post
நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கியது சட்டபூர்வமானது; உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து நீக்கியது சட்டபூர்வமானது; உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.