எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்குமாயின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.