திருகோணமலையை அண்மித்த பகுதியான மொரவெவ பிரதேசத்தில் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலநடுக்கம் இன்று (11.11.2023) பகல் 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.
குறித்த தகவலை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த பகுதியில் உள்ள மக்கள் நிலநடுக்கத்தினை உணர்ந்துள்ளதோடு, அவர்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.