Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் உயிரிழந்த ஒருவர் 7 நாட்களின் பின்னர் வீட்டிற்கு வந்த அதிசயம்!

இலங்கையில் உயிரிழந்த ஒருவர் 7 நாட்களின் பின்னர் வீட்டிற்கு வந்த அதிசயம்!

3 years ago
in செய்திகள்

கம்பளையில் பிரேத பரிசோதனையின் பின்னர் அடக்கம் செய்யப்பட்ட நபர் 7 நாட்களின் பின்னர் தனது தாய் மற்றும் உறவினர்களுடன் கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் கம்பளை பேருந்து நிலையத்தில் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலத்தை ஏற்றுக்கொள்ள எவரும் முன்வராததால் சடலம் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையில், இறந்தவர்களின் உறவினர்கள் ஒரு குழுவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் உறவினர்கள் என அடையாளம் காணப்பட்ட தாயும் சகோதரரும் கம்பளை வைத்தியசாலைக்கு வந்து சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.

சகோதரர் மற்றும் உறவினர்கள் சடலத்தை அடையாளம் கண்டதையடுத்து, கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சடலத்தை விடுவித்ததுடன், குழுவினர் சடலத்தை மேரிவிலவத்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்று மத அனுஷ்டானங்களை மேற்கொண்டு 2 நாட்களுக்கு பின்னர் அடக்கம் செய்தனர்.

சம்பவம் நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டவர் வீட்டிற்கு வந்துள்ளார். “அம்மா, நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார். “நீங்கள் கம்பளையில் இறந்துவிட்டீர்கள் என மக்கள் வருத்தப்பட்டனர்.

நாங்கள் உங்களை வீட்டிற்கு கொண்டு வந்து அடக்கம் செய்தோம்” என தாயார் குறிப்பிட்டுள்ளார். “இல்லை.. அம்மா நான் கம்பளைக்கு போகவில்லை. “நான் நாவலப்பிட்டியில் இருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் தாயும், சகோதரனும், உறவினர்களும் இறந்து விட்டதாக நினைத்து புதைத்தவர் தொடர்பில் ஆராய்வதற்காக மரண விசாரணை அதிகாரியை சந்தித்தனர்.

சுமார் எழுபதாயிரம் ரூபா இறுதிச்சடங்கிற்கு செலவானதாக இக்குழுவினர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சம்பவத்தை விபரித்துள்ளனர்.

அதற்கமைய, மரண விசாரணை அதிகாரியின் அறிவித்தலின் பேரில் புதைக்கப்பட்ட நபர் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்ததாக கருதப்படும் நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டதாகவும், அதன் பின்னர் திருமணமான தனது மகள்களின் வீடுகளில் தங்கி அந்த வீடுகளுக்கு வெளியில் பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

எனினும் சமீபகாலமாக நாவலப்பிட்டி பகுதியில் உள்ள தனது மகளின் வீட்டில் தங்கியிருந்த அவர், நாவலப்பிட்டி நகரிலேயே அதிக நேரத்தைக் கழித்ததால், நீண்ட நாட்களாக மகளின் வீட்டுக்குச் செல்லவில்லை என கூறப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
செய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

November 3, 2026
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!
செய்திகள்

ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!

November 3, 2026
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!
செய்திகள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!

November 3, 2026
யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

November 3, 2026
சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!

November 3, 2026
TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!
செய்திகள்

TIN இலக்கத்திற்காக இனி IRD அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டாம்; பொதுமக்களுக்கு வெளியான அறிவிப்பு!

November 3, 2026
Next Post
கனடா – டொரன்டோவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்!

கனடா - டொரன்டோவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.