வடக்கு – கிழக்கு பகுதிகளில் தமிழர் தாயகத்தின் மீட்சிக்காக போராடி தன் உயிர்நீத்த மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை தாயகம் தவிர்ந்த ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் சர்வதேச நாடுகளிலும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுவருகின்றன.
இந்தவகையில், கனடா – டொரன்டோவில் தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.