தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி இறக்குமதி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கீழ்மட்ட நபர்களை மாத்திரமே குறிவைப்பதாக சுகாதார நிபுணர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.
எனவே, சம்பந்தப்பட்ட உயர்மட்ட நபர்களைக் கைது செய்ய முழுமையான விசாரணைக்கும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், தரமற்ற ஊசிகளைப் பெற்ற நோயாளிகளின் கதி என்னவாகும் என்றும் அவர்கள் கவலை எழுப்பியுள்ளனர்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊழல் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் உட்பட பல அதிகாரிகள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.