கற்பிட்டி, தளுவ – நிர்மலாபுர பிரதேசத்தில் நத்தார் விருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் , வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.