Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சினிமா பாணியில் இருவர் மீது என்கவுன்ட்டர்!

சினிமா பாணியில் இருவர் மீது என்கவுன்ட்டர்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் காஞ்சிபுரத்தில் கடந்த 26-ந் தேதி ரவுடி சரவணன் என்ற பிரபாகரன் என்பவரை கொலை செய்த வழக்கில் காஞ்சிபுரம் பல்லவ மேடு மேற்கு பகுதியைச் சேர்ந்த ரகு என்ற ரகுவரன், சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அசேன் என்ற கருப்பு அசேன் ஆகியோரை சிவ காஞ்சி போலீசார் தேடி வந்தனர்.

இன்று அதிகாலை (27) காஞ்சிபுரம் புதிய ரயில் நிலைய மேம்பாலம் அருகில் 2 பேரும் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து பிடிப்பதற்காக விஷ்ணு காஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகர், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் சசிகுமார் ஆகியோர் சென்றனர்.

அப்போது சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் காவலர் சசிகுமாரை ரவுடிகள் ரகு, அசேன் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவருக்கும் கை, காலில் வெட்டு விழுந்தது.

இதையடுத்து உதவி ஆய்வாளர் சுதாகரை வெட்ட முயன்ற போது அவர் தற்காப்புக்காக துப்பாக்கியால் இரண்டு ரவுண்டு சுட்டதாக தெரிகிறது. இதில் ரகு, அசேன் ஆகிய இருவருக்கும் மார்பில் குண்டு பாய்ந்தது. அவர்களை உடனடியாக போலீசார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

இதற்கிடையில் போகும் வழியிலேயே 2 பேரும் உயிரிழந்தனர். வெட்டு காயமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

என்கவுன்ட்டர் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் நேரிடையாக விசாரணை நடத்தி வருகிறார். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட ரவுடி ரகு மீது ஒரு கொலை வழக்கு உள்பட 8 வழக்குகளும், அசேன் மீது ஒரு கொலை வழக்கு உள்பட 5 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!
உலக செய்திகள்

ஈரான் மீதான நடவடிக்கை இன்னும் முடியவில்லை; இஸ்ரேல் பிரதமர்!

June 23, 2026
புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது
செய்திகள்

புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

June 23, 2026
நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!
செய்திகள்

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளை மூட உத்தரவு!

June 23, 2026
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!
செய்திகள்

அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு!

June 23, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஓய்வுபெற்ற அதிபர் உயிரிழப்பு

June 23, 2026
வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!
செய்திகள்

வயல் காவலுக்குச் சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழப்பு!

June 23, 2026
Next Post
“அவனெல்லாம் ஒரு ஜெண்டில் மேனா”; அஜித் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு!

"அவனெல்லாம் ஒரு ஜெண்டில் மேனா"; அஜித் ஏமாற்றி வருவதாக குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.