Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தொடர்பில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கை; முதல் 5 நாடுகளுக்குள் உள்ளடக்கம்!

இலங்கை தொடர்பில் வெளிவந்துள்ள ஆய்வறிக்கை; முதல் 5 நாடுகளுக்குள் உள்ளடக்கம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் சொத்துக்களின் பங்கீட்டில் சமத்துவமின்மை நிலவும் முதல் 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்குகின்றதாக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் புதிதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் ‘எமது எதிர்காலத்தைக் கட்டியெழுப்பல்: ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் மனிதவள அபிவிருத்திக்கான புதிய வழிமுறைகள்’ எனும் மகுடத்திலான 2024 ஆம் ஆண்டுக்கான பிராந்திய அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையின் படி ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் சொத்துக்களின் பங்கீட்டில் சமத்துவமின்மை நிலவும் முதல் 5 நாடுகளின் பட்டியலில் இலங்கை, தாய்லாந்து, சீனா, மியன்மார் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று வருமானப்பங்கீட்டிலும் இலங்கை சமத்துவமற்ற நிலையிலேயே காணப்படுகின்றதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக உயர்மட்டத்திலுள்ள ஒரு சதவீதமான இலங்கையர்கள் தனிப்பட்ட மொத்த சொத்துக்களில் 31 சதவீதமானவற்றைத் தம்வசம் வைத்திருப்பதுடன், கீழ்மட்டத்திலுள்ள 50 சதவீதமானோருக்கு நாட்டின் மொத்த சொத்துக்களில் வெறுமனே 4 சதவீதத்தை விடவும் குறைந்த அளவிலான சொத்துக்கள் மாத்திரமே பகிரப்பட்டுள்ளன.

அதன்படி ஆசிய – பசுபிக் பிராந்தியத்தின் பெரும்பாலான நாடுகளில் அடிமட்டத்திலுள்ள 50 சதவீதமான மக்கள் மத்தியில் பகிரப்பட்டுள்ள மொத்த சொத்துக்களின் பெறுமதி 6 சதவீதத்துக்கு மேற்படாமை குறித்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் அந்த அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி சமூகத்தின் 10 சதவீத செல்வந்த வர்க்கத்தினர் மொத்த சொத்துக்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றைத் தொடர்ந்து அனுபவித்து வருவதாகவும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘கொவிட் – 19 வைரஸ் பெருந்தொற்றும், அதன்விளைவாக ஏற்பட்ட முடக்கமும் இப்பிராந்தியத்திலுள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்களை வெகுவாகப் பாதித்துள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக முறைசாரா தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படும் சுற்றுலாத்துறை, வெளிநாட்டுப் பணவனுப்பல்கள் மற்றும் உற்பத்தித்துறை ஆகியவற்றின் மூலமான வருமானத்தை பல நாடுகள் இழந்துள்ளன.

அதேபோன்று இவ்வழுத்தங்கள் குறிப்பாக தெற்காசிய மற்றும் தென்கிழக்காசியப் பிராந்திய நாடுகளின் சுகாதாரத்துறையில் நிலவும் பலவீனத்தைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியுள்ளன’ எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!
செய்திகள்

பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!

September 28, 2026
யுத்த மனநிலையைத் தடுக்க திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது; பொலிசார்
செய்திகள்

யுத்த மனநிலையைத் தடுக்க திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது; பொலிசார்

September 28, 2026
உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்
செய்திகள்

உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்

September 28, 2026
திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!

September 27, 2026
பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்
செய்திகள்

பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்

September 27, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்

September 27, 2026
Next Post
பிரான்ஸ் தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதியுதவி கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

பிரான்ஸ் தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதியுதவி கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு