Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் வெளிக்கொணர்ந்தார்.

இன்று (13.08.2026) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டபோதே இவ்விடயத்தினை வெளிப்படுத்தினார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் தொல்பொருட்திணைக்களம் ஆலய வளாகத்திற்குள் ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் இரவு நேரத்தில் இது தொல்பொருட்திணைக்களத்திற்குரிய இடமென்று பெயர்ப்பலகை நாட்டியுள்ளது. அந்த பெயர்ப்பலகையில் ஆலய வளாகத்தில் ஒரு அபிவிருத்தியும் மேற்கொள்ளக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறு இரவு நேரத்தில் இவ்வாறு செய்ய முடியும்.

இந்த ஆலயம் பாடல் பெற்ற திருத்தலமாகும். ஆலயச்சூளல் தொல்பொருளுடன் தொடர்புடையது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால், ஆலய நிர்வாகத்திற்கு தெரியாமல் குறித்த பெயர்ப்பலகையை நாட்டியது மட்டுமல்லாமல், அந்த பெயர்ப்பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் கூட அந்த ஆலயத்தின் உண்மையான வரலாற்றை மாற்றியமைப்பதாக உள்ளது. குறித்த ஆலய வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாலிங்கம் தொடர்பாகவும் நந்தி தொடர்பாகவும் எதுவும் குறிப்பிடப்படாமல் முற்றிலுமாக வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியுமா என கேட்க விரும்புகிறேன்.

ஏற்கனவே அங்கு அகழ்வாராய்ச்சிகள் நடந்த இடங்களில் சில பதாகைகள் தொல்பொருட்திணைக்களத்தால் நாட்டப்பட்டிருக்கின்றது. அதற்கு மேலதிகமாகவே இவை தற்போது யாருக்கும் அறியப்படுத்தப்படாமல் நாட்டப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த விடயத்தினை கவனத்திலெடுத்து உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!
செய்திகள்

பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!

September 28, 2026
யுத்த மனநிலையைத் தடுக்க திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது; பொலிசார்
செய்திகள்

யுத்த மனநிலையைத் தடுக்க திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது; பொலிசார்

September 28, 2026
உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்
செய்திகள்

உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்

September 28, 2026
திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!

September 27, 2026
பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்
செய்திகள்

பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்

September 27, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்

September 27, 2026
Next Post
A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!

A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு