Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட போதகரின் மதக் குழு கைது!

பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட போதகரின் மதக் குழு கைது!

3 years ago
in செய்திகள்

உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட மதக் குழுவைச் சேர்ந்த 6 பேர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (10) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

அச்சுவேலிப் பகுதியில் உள்ள “அசெம்பிளி ஒவ் ஜீவவார்த்தை” என்ற கிறிஸ்தவ சபை ஒன்றின் போதகர் உட்பட 30 பேர் கொண்ட குழு ஒன்று நேற்று யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டது.

கிறிஸ்தவ சபையின் போதகர் உட்பட மூவர் கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றுக்குள் புகுந்து அங்கிருந்த பெண்களைத் தாக்கி அச்சுறுத்தியமை தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அது தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காகவே போதகரும் குழுவினரும் உதயன் தலைமையகத்துக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டனர்.

உதயன் ஆசிரியர் பீடப் பணியாளர்களைச் சூழ்ந்து அச்சுறுத்தி தாக்க முயன்றதுடன், உதயன் பணியகத்துக்குள் பணியில் இருந்தவர்களை காணொளி பதிவு செய்து அச்சுறுத்தியதுடன், அக்குழு அநாகரிகமாக நடந்து கொண்டதா தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு செய்தியை வழங்கியவர்களை இனங்காட்ட வேண்டும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் சம்பவத்துடன் தொடர்புடைய போதகர் மற்றும் மற்றொருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இன்று காலை இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது, அவர்களை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.

ஏனையோரும் கைது செய்யப்பட்டு விரைவில் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாது என்றார் அமைச்சர்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறாது என்றார் அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு