முன்னாள் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேரத் குமார எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் மாளிகாகந்த நீதிவான் லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தரமற்ற இமியுனிகுளோபியுலின் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் (சிஐடி) அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டார்.