மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உன்னிச்சை 3 ஆம் கட்டையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஆயித்தியமலை இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பிரயாணத்தை மேற்கொண்ட பஸ்வண்டி இன்று (08) திங்கட்கிழமை வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியில் இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
பஸ் வண்டியில் பயணித்த எவருக்கும் பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








