பிரான்ஸ் இல் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் வழங்கப்படவுள்ள பதக்கங்கள் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (08) விழா ஏற்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட இந்தப் பதக்கத்தில் பிரான்ஸ் நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் அம்சம் இடம்பெற்றிருப்பது சிறப்பான விடயமாக பார்க்கப்படுகிறது.
அதன்படி, அந்த பதக்கங்கள் மையத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அறுகோண வடிவ இரும்புத் துண்டானது அசல் ஈபிள் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு (2024) பாரிசில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் ஒவ்வொரு விடயங்களும் பார்த்து பார்த்து செய்யப்பட்டு வருகிற நிலையில்,ஈபிள் கோபுரத்திலிருந்து எடுக்கப்பட்ட 18 கிராம் சிறிய ரக இரும்பு துண்டுகள் இந்த பதக்கங்ளில் பொறிக்கப்பட்டுள்ளமை மேலும் சிறப்பான விடயமாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
.