உடலுக்கு ஆபத்தான இரசாயன பொருட்கள் அடங்கிய சரும கிரீம்களை விற்பனை செய்ததாக கூறப்படும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புறக்கோட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவை , வத்தளை மற்றும் கலகெடிஹேன உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 22,25,45,52 வயதுடையவர்களாவர்.
இதன்போது ஆபத்தான இரசாயன பொருட்கள் அடங்கிய கிரீம்களை விற்பனை செய்த 4 விற்பனை நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1,143 வகையான கிரீம்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.