Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காந்தி பூங்காவில் போராட்டம்; தாம் மிரட்டப்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்டதாக குற்றச்சாட்டு!

மட்டு காந்தி பூங்காவில் போராட்டம்; தாம் மிரட்டப்பட்டு ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்டதாக குற்றச்சாட்டு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்று மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், தாம் மிரட்டப்பட்டே ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்துவரப்பட்டதாக ஊடகவியலாளர்களிடம் இரகசியமாகத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இன்றைய தினம் (25) மட்டக்களப்பு ஆசிரியர் சங்கப் பிரமுகர் உதயரூபன் என்பவருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் தங்களை மிரட்டி வற்புறுத்தியே அழைத்துச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆசிரியர் சேவைக்கும் தொழிற்சங்க சேவைக்கும் பொருத்தம் இல்லாத ஆசிரியர் சங்க செயலாளர் பொ.உதயரூபனை அனைத்து பதவியிலிருந்தும் நீக்கும்படி தெரிவித்து கண்டன ஆர்பாட்டம் ஒன்று இன்று (25) ஞாயிற்று கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று காலை 10 மணியளவில் ஆசிரியர் ஒருவரை தாக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் சங்கத்தினால் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன் போது கருத்து தெரிவித்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள்,

பொ. உதயரூபன் என்கிற தனி நபர் தன்னுடைய சுயலாபத்திற்காக கல்வி துறையினை பயன்படுத்தி அனைவரையும் இழிவுபடுத்துவதாகவும் கடந்த காலங்களில் தான் ஒரு படித்த சமூகம் என்பதை மறந்து முகநூலில் தேவையற்ற விமர்சனங்களை பரப்பியதாக தெரிவித்திருந்தனர்.

மேலும் சிறந்த அடைவுமட்டங்களை அடையும் வலையங்களை இவர் பாராட்டாமல் மாறாக குறைந்த அடைவுமட்டங்களை பெற்றால் அந்த வலையங்களை தனது முகநூலில் இவர் விமர்சிக்கின்றார் என்று குற்றம் சுமத்தியதுடன், எதிர் மறை மனப்பாங்குகளை கொண்ட இவர் கடந்த காலத்தில் தரம் 2 இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியரை தாக்கி உள்ளார் எனவே இவரை உடனடியாக அனைத்து பதவிகளிலும் இருந்து விலக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இவ்வாறு போராட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள், அதிபர்கள் தாம் மிரட்டப்பட்டதினாலேயே போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டதாக ஊடாகவியலார்களிடம் இரகசியமாக தெரிவித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு அதிபர் இதுபற்றித் தெரிவிக்கும்போது, ‘வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் குறிப்பிட்ட இந்த ஆசிரியர் சங்கப் பிரமுகரான உதயரூபனுக்கும் இடையில் ஏற்கனவே தனிப்பட்ட விரோதம் உள்ளது. பணிப்பாளரின் கணவனால் முன்னர் ஒருதடவை உதயரூபன் பகிரங்கமாகத் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட தனிப்பட்ட விரோதமே இது எனவும், கடந்த புதன்கிழமை ஆசிரியர்களின் இடமாற்றம் சம்பந்தமாக நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளைச் சாதமாகவைத்து தனது தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக்கொள்வதற்காக வலயக் கல்விப் பணிப்பாளரினாலேயே இந்த ஆர்பாட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டது.

ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டேயாகவேண்டும் என்று மட்டக்களப்பு வலய பாடசாலைகளின் அதிபர்கள் வற்புறுத்தப்பட்டார்கள். கலந்துகொள்ளாதுவிட்டால் உங்கள் பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் தரமாட்டேன். தனித்து விடப்படுவீர்கள் என்று மிரட்டப்பட்டார்கள்.

வலயக் கல்விப் பணிப்பாளர் நேரடியாகவே எங்களை மிரட்டினார். அவரது தொலைபேசி உரையாடல் பதிவுகள் கூட சில அதிபர்களிடம் இருக்கின்றன. பழிவாங்கப்பட்டுவிடுவோம் என்ற அச்சம் காரணமாக அதனை வெளிப்படுத்தமுடியாமல் இருக்கின்றது’ என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு ஆசிரியர் தெரிவிக்கும் போது, ‘பிரதி அமைச்சராக இருக்கும் ஆயுதக் குழு தலைவரது நெருங்கிய தோழிதான் தற்போதைய வலயகக் கல்விப் பணிப்பாளர். அதனால் அடங்கி, அச்சத்துடன் நடந்தேயாகவேண்டிய தேவை எம்போன்ற அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இருக்கவே செய்கின்றது. ‘வா’ என்றால் வரவேண்டும்.. ‘போ’ என்றால் போய்த்தானாகவேண்டும்.. இது எமது தலைவிதி’ என்று தெரிவித்தார்.

‘தற்போதைய மட்டக்களப்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்தான் கிழக்கு மாகாணப் பணிப்பாளரும் கூட. கிழக்கில் இன்று எத்தனையோ தகுதிவாய்ந்த எஸ்.எல்.ஈ.எஸ். பட்டதாரிகள் இருந்தும், இரண்டு பதவிகளை ஒரு நபருக்கே வழங்கும் அளவுக்கு பல உயர் இடங்களில் செல்வாக்குப் பெற்றவர்தான் அந்த அதிகாரி.

வேலை வேண்டும்.. சம்பளம் வேண்டும் என்றால் சொன்னதைச் செய்துதான் ஆகவேண்டும். மட்டக்களப்பு தமிழ் மாணவர்களுக்கு சுயமாய் வாழ்வது எப்படி என்று சொல்லிக்கொடுக்கவேண்டிய நாங்கள், சுயமாக முடிவுகூட எடுக்கமுடியாது இருப்பதையிட்டு வெட்கமாக இருக்கின்றது’ என்று தெரிவித்தார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மற்றொரு ஆசிரியர்.

கிழக்கை சுபீட்சமாக்கவேண்டும் என்று முகப்புத்தகத்தில் வீரம் பேசுகின்ற மண்ணின் மைந்தர்கள், மட்டக்களப்பு ஆசிரியர்கள் மீது வழங்கப்படுகின்ற இதுபோன்ற அழுத்தங்களுக்கு எதிராகவும் குரல் கொடுக்கவேண்டும் என்று கோருகின்றார்கள் கையறுநிலையில் இருக்கின்ற தமிழ் பாடசாலை அதிபர்கள்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
செய்திகள்

சிறைச்சாலை அதிகாரிகளில் அதிகரிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்; 2025 அறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

July 24, 2026
குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!
செய்திகள்

குழந்தையின் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு; காயமடைந்த நபர் உயிரிழப்பு!

July 24, 2026
துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது
செய்திகள்

துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜை கொலை; சடலம் காட்டுப் பகுதியில் மீட்பு – இருவர் கைது

July 24, 2026
தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!
செய்திகள்

தமிழ், சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்று நிறைவு; திங்கட்கிழமை மூன்றாம் தவணை ஆரம்பம்!

July 24, 2026
இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு புதிய வரியை விதித்தது அமெரிக்கா

July 24, 2026
முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!
செய்திகள்

முகநூல் நட்பு பெயரில் ரூ.8.37 இலட்சம் மோசடி; மட்டக்களப்பில் பெண் ஒருவர் பணம் இழப்பு!

July 24, 2026
Next Post
மட்டு ஏறாவூர் கடற்கரையில் சட்ட விரோத வலைகள் மற்றும் 3 தோணிகள் கைப்பற்றப்பட்டன!

மட்டு ஏறாவூர் கடற்கரையில் சட்ட விரோத வலைகள் மற்றும் 3 தோணிகள் கைப்பற்றப்பட்டன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.