இரத்தினபுரி புதிய நகரத்தில் அமைந்திருக்கும் மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக ஆசிட் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தாக்குதலானது நேற்று (06.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஆறு பேர் பலத்த காயங்களுடன் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக இரத்தினபுரி பொலிஸார் கூறியுள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு வாகன விபத்தில் உயிரிழந்த ஒருவரின் ஆதரவாளர்களால் இந்த திரவக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.