Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண் கடத்தியவரும் ,மதுபானம் கடத்தியவரும் கைது ;மட்டக்களப்பில் சம்பவம்!

மண் கடத்தியவரும் ,மதுபானம் கடத்தியவரும் கைது ;மட்டக்களப்பில் சம்பவம்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெலிகொம் வீதியில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மண் கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தகவலை காத்தான்குடி பொலிஸ் நிலைய போதைவஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரும் உழவு இயந்திரமும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் அனுமதிப்பத்திரமின்றி அதிகளவான மதுபான போத்தல்களை சட்டவிரோதமாக கொண்டு சென்று விற்பனை செய்த சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (07.05.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

அதிகளவான பியர் மற்றும் மதுபான போத்தல்கள் சட்டவிரோதமாக அனுமதி பத்திரமின்றி விற்பனையில் ஈடுபடுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஜீ.துசார திலங்க ஜெயலால் வழிநடத்தலில், பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான டி.டினேஸ் தலைமையிலான குற்றத் தடுப்பு பிரிவினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதன் போது சுமார் 37 வயது மதிக்கத்தக்க துறை நீலாவணை பகுதியை சேர்ந்த சந்தேக நபர் மதுபான போத்தல்கள் மற்றும் பியர் ஒரு தொகுதி ஆகியன சூட்சுமமாக மறைத்து விற்பனையில் ஈடுபட்ட நிலையில் மாறுவேடத்தில் சென்ற பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைதான நபர் வசம் இருந்து மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சுமார் பல இலட்சம் ரூபா பெறுமதியானவை.

அளவிற்கு அதிமான மதுபான போத்தல்களை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் உரிய அனுமதி இன்றி சட்டவிரோதமாக பதுக்கி விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மேற்படி சந்தேக நபர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!

October 27, 2026
மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!

October 26, 2026
மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு
காணொளிகள்

மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு

October 26, 2026
வங்காள விரிகுடாவில் உருவானது சூறாவளி; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
மட்டு செய்திகள்

வங்காள விரிகுடாவில் உருவானது சூறாவளி; மீனவர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

October 26, 2026
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!

October 26, 2026
மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி
காணொளிகள்

மட்டக்களப்பு முகத்துவாரக் கடலில் ஆணொருவரின் சடலம் மிதந்து வருவதாக மீனவர்கள் தகவல்-காணொளி

October 25, 2026
Next Post
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரின் மகளை தேடுகிறது அரசாங்கம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவரின் மகளை தேடுகிறது அரசாங்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு