மட்டக்களப்பு, நாவற்குடா நொச்சிமுனை 5 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள 34, 750 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என காத்தான்குடி பொலிஸ் நிலையபோதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எச்எம்.சியாம் தெரிவித்தார். இச்சம்பவம் காத்தான்குடிபொலிஸ் பிரிவுக்குட்பட்டநொச்சிமுனையில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறியின் வழிகாட்டலில் மாவட்ட ரகசிய தகவல் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய போதைவஸ்து ஒழிப்புப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின்போதுநாவற்குடா நொச்சிமுனை 5 ஆம்குறுக்குத் தெருவில் நீர்நிலையொன்றினுள் சூட்சுமமானமுறையில் மறைத்து வைத்திருந்தசட்டவிரோத கசிப்பு கொள்கலன்களை பொலிஸார் மீட்டதுடன் சந்தேக நபர்களையும் கைது செய்தனர்.