Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனையில் அர்ப்பணிப்புமிக்க பணியாளர்களுக்கு “சேவை நலன்” பாராட்டு விழா!

கல்முனையில் அர்ப்பணிப்புமிக்க பணியாளர்களுக்கு “சேவை நலன்” பாராட்டு விழா!

2 years ago
in செய்திகள்

கல்முனைப் பிராந்தியத்தில் அதிக போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை கண்காணித்து அவர்களின் சுகாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் பாராட்டிப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

CERI Kids சர்வதேச தொண்டு நிறுவனம் கல்முனைப் பிராந்தியத்தில் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவும் பொருட்டு கடந்த 06 “மாதங்களாக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

கல்முனை பிராந்தியத்தில் உள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர்.

குறித்த உத்தியோகத்தர்களை பாராட்டிக் கௌரவிக்கும் பொருட்டு பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு ஏற்பாடு செய்த சேவை நலன் பாராட்டு விழா புதன்கிழமை (24) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது. பிராந்திய தாய் சேய் நலன் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.றிஸ்பின் அவர்களினால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சீ.எம்.பசால், கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, காரைதீவு, நாவிதன்வெளி, நிந்தவூர் ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள், CERI Kidsநிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

மேற்குறித்த சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும் பொதுச் சுகாதார தாதிய உத்தியோகத்தர்கள், மேற்பார்வை பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், பொதுச்சுகாதார மருத்துவ மாதுக்கள் இதன் போது பாராட்டி பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பெண்களுக்கான நலன் கிளினிக்கில் மிகத் திறமையாக செயல்பட்டு முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கும் இந்நிகழ்வின்போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனைப் பிராந்தியத்தில் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் சுகாதார நலன் கருதி பல்வேறு கிளினிக், போஷாக்கு உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் உதவித் தொகைகளையும் வழங்கி கடந்த 6 மாதகாலமாக Ceri சர்வதேச தொண்டு நிறுவனம் பெரும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
யாழில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

யாழில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.