Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2000 ரூபாயை பயன்பாட்டிலிருந்து நீக்குகிறது இந்தியா!

2000 ரூபாயை பயன்பாட்டிலிருந்து நீக்குகிறது இந்தியா!

3 years ago
in உலக செய்திகள்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் 2 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் பெறப்படும் என அந்த வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை கருப்புப் பண பயன்பாட்டினை மேலும் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 2 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களின் பயன்பாட்டினை ஏற்கனவே இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால், சந்தையில் அவற்றின் பயன்பாடு பெருமளவில் குறைந்து காணப்பட்டது.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி 2,000 ரூபாய் நாணயத்தாள்களின் பயன்பாடு 6.73 இலட்சம் கோடியாக இருந்தது. இது 2023, மார்ச் 31ஆம் திகதியில் 3.62 இலட்சம் கோடியாக குறைவடைந்துள்ளது.

பயன்பாட்டில் உள்ள 2,000 ரூபாய் நாணயத்தாள்களின் மதிப்பில் இது 10.80 சதவீதமாகும். இந்தத் தொகையில் பெரும்பகுதி கருப்புப் பணமாக இருக்க வாய்ப்புள்ளதாலேயே அவை வங்கிக்கு வரவில்லை என கருதப்படுகிறது.

இவ்வாறான நிலையில், அவற்றை வங்கிக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அடுத்து 2 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடையசெய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்
உலக செய்திகள்

தற்காலிக போர் நிறுத்தம் என்றால் ‘குறைந்த தீவிரத்துடன் சுடுவது’ ;ட்ரம்ப்

June 5, 2026
குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!
உலக செய்திகள்

குவைத் விமான நிலைய தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயம்!

June 4, 2026
ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!
உலக செய்திகள்

ஈரான் விவகாரத்தில் ட்ரம்புக்கு பின்னடைவு; ஈரான் போரை முடிக்க அமெரிக்க சபை தீர்மானம்!

June 4, 2026
பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை
அரசியல்

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

June 3, 2026
குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!
உலக செய்திகள்

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!

June 3, 2026
Next Post
பிக்குகளினால் அதிகரிக்கும் துஷ்பிரயோகங்கள்; மீண்டும் ஒரு சம்பவம் பதிவு!

பிக்குகளினால் அதிகரிக்கும் துஷ்பிரயோகங்கள்; மீண்டும் ஒரு சம்பவம் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு