Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
25 அடி மர உச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

25 அடி மர உச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புத்தளம் ஆண்டிகம் பகுதியில் 25 அடி உயரம் கொண்ட வேம்பு மரத்தில் தவறான முடிவெடுத்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று(05) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஆண்டிகம, மயில்லாவெவ பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபருக்கும், மனைவிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று (05) மாலை மயில்லாவெவ பகுதியில் உள்ள குளம் ஒன்றிற்கு அருகிலுள்ள 25 அடி உயரம் கொண்ட பாரிய வேம்பு மரத்தின் மீது ஏறிய நபர், அந்த மரக்கொப்பொன்றில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, அவ்வழியாக சென்ற நபர் ஒருவர் இதுபற்றி பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மஹாகும்புக்கடவல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அத்துடன், சம்பவ இடத்திற்கு சென்ற புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணையை நடத்தினார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, குறித்த நபர் தூக்கிட்டதன் காரணமாக கழுத்து இறுகியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக புத்தளம் பகுதிக்கு பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?
செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?

October 3, 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
Next Post
ஹொரண பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் ஸ்கூட்டர் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!

ஹொரண பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் ஸ்கூட்டர் கைவிடப்பட்ட நிலையில் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு