Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நானுஓயா- ரதல்ல வீதியில் கனரக வாகனங்கள் செல்லத்தடை!

நானுஓயா- ரதல்ல வீதியில் கனரக வாகனங்கள் செல்லத்தடை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நுவரெலியா- தலவாக்கலை வீதியின் நானுஓயா – ரதல்ல குறுக்கு வீதியின் இருபுறமும் போடப்பட்டுள்ள பாதுகாப்பு இரும்பு வேலி பல இடங்களில் சேதமடைந்துள்ளதாக வீதியை பயன்படுத்தும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒருபுறம் செங்குத்தான சரிவு கொண்ட இந்த வீதி பகுதியில் வாகன விபத்துக்கள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், பாதுகாப்பு வீதி இரும்பு வேலி இருப்பதால் பல விபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வீதியில் அடிக்கடி ஏற்படும் வீதி விபத்துகளால் சுமார் ஒரு வருடமாக பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தன. இந்த வீதியில் விபத்துகள் இடம் பெறுவதால் பல இடங்களில் பாதுகாப்புக்காக மண் மூடைகள் வைக்கப்பட்டு அவையும் சேதமடைந்துள்ளதாகவும் வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

இவ் வீதியை முறையாக செப்பனிட வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன் வர வேண்டும் என அப் பகுதியில் உள்ள மக்கள் மற்றும் வாகன சாரதிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது இவ்வாறிக்க அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் இவ்வீதியின் ஊடாக கனரக வாகனங்கள் செல்வதற்கு நுவரெலியா மாவட்ட செயலகம் தடை விதித்திருந்தது. இந்த வீதியூடாக கனரக வாகனங்கள் செல்வதை தடை செய்வதற்காக நானுஓயா பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தனர்.

ஒரு சில நேரங்களில் பொலிஸார் கடமையில் இல்லாத வேளையில் தனியார் பேருந்துகள் மற்றும் பார ஊந்துகள் இக் குறுக்கு பாதையில் போக்குவரத்தில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால் மீண்டும் விபத்துக்கள் ஏற்படலாம் என்ற அச்சத்தால் இவ் வீதிளில் கனரக வாகனங்கள் செல்வதை முற்றாக தடை செய்ய வேண்டும் என இப்பிரதேசத்தில் வாழும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
மட்டு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் புத்தாண்டு நிகழ்வுகள்!

மட்டு குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டு கழகத்தின் புத்தாண்டு நிகழ்வுகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு