Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மறுமணம் செய்த பெண்ணுக்கு நடந்த சோகம்; 4 வருடங்களின் பின் மீட்கப்பட்ட சடலம்!

மறுமணம் செய்த பெண்ணுக்கு நடந்த சோகம்; 4 வருடங்களின் பின் மீட்கப்பட்ட சடலம்!

2 years ago
in செய்திகள்

நான்கு வருடங்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயின் சடலம் காலி தவலம் ஹல்லகந்த பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் உள்ள கழிவறை குழி ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த பெண்ணின் கள்ளக்காதலனே அவரை கொன்று உடலை கழிவறை குழியில் வீசியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிலுஷிகா சந்தமாலி என்ற பெண் கடந்த 2020 ஜூன் 6 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த நிலையில், அவரின் தாயார் அந்த நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

தன் முதல் திருமணத்திலிருந்து விவாகரத்து பெற்ற நிலுஷிகா, தனது இரண்டு குழந்தைகளுடன் “பதல சாந்த” என்ற ஆணுடன் வாழ்ந்து வந்தார், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் காணாமல் போனமை தொடர்பில் அப்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போதும் எவ்வித தகவலையும் வெளிக்கொணர முடியவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் காலி பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நான்கு வருடங்களாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், காணாமல் போன பெண்ணின் கள்ளக்காதலனான ஹேனகொடகே சாந்த என்ற 44 வயதுடைய “பதல சாந்த” என்ற நபரை கைது செய்தனர்.

இதன்போது, குறித்த பெண்ணை அடித்துக் கொன்று உடலை வீட்டின் அருகே உள்ள கழிவறை குழியில் மறைத்து வைத்தது தெரியவந்தது.

குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கிய “பதல சாந்த”, அப்பகுதியிலுள்ள வீடொன்றில் நடைபெற்ற விருந்தில் கலந்துகொண்டதாகவும், அங்கு குழந்தைகள் வந்து தாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

அப்போது, குடிபோதையில் இருந்த பதல சாந்த, வீட்டுக்கு வந்து மனைவியை மீண்டும் தாக்கியதாகவும், மறுநாள் காலை உடல் குளிர்ந்து காணப்பட்ட நிலையில், துணியொன்றில் உடலை சுற்றி கழிவறை குழியில் போட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், அவர் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று ஒன்றும் தெரியாதது போது அவர்களிடம் மனைவி தொடர்பில் விசாரித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சூழ்நிலையில், தற்போது மீட்கப்பட்ட சடலம் நிலுஷிகாவின் சடலம் என குழந்தைகளும் உறவினர்களும் அடையாளம் கண்டுள்ளனர்.

அப்போது, ​​அவர் அணிந்திருந்த காதணியும் கிடைத்தது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

தொடர்புடையசெய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?
செய்திகள்

மட்டக்களப்பு வெல்லாவெளியில் 2500 ஆண்டு பழமையான தமிழர் தொன்மைச் சான்றுகள் மீட்பு?

October 3, 2026
இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!
செய்திகள்

இஸ்ரேல் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.12 இலட்சம் மோசடி; முன்னாள் ஜனாதிபதி இணைப்புச் செயலாளர் கைது!

October 3, 2026
கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலை விவகாரம்; ஆறு பேருக்கு இலவச சட்ட உதவி வழங்க கோரிக்கை!

October 3, 2026
பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி இலங்கை வெண்கலப் பதக்கம் வென்றது!

October 3, 2026
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!
செய்திகள்

ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்; கோடீஸ்வரன் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்!

அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.