Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சம்பூர் கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை!

சம்பூர் கைது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோரிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நினைவேந்தல் நிகழ்வைக் காரணம் காட்டி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியமைக்காக திருகோணமலை, மூதூர் – சம்பூரில் நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்குக் கண்டனம் தெரிவித்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த அவர், “இலங்கையில் இடம்பெற்ற போரில் உயிரிழந்தவர்களை நினைவேந்தி அஞ்சலிக்க அவர்களின் உறவுகளுக்கு முழு உரித்து உண்டு.

அதை இன ரீதியாகவோ அல்லது மத ரீதியாகவோ பிரித்துப் பார்க்க முடியாது. எனவே, இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் மக்களை அவர்களின் உறவுகள் நினைவேந்த அரசு அனுமதிக்க வேண்டும்.

அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடி எந்தத் தடை உத்தரவுகளையும் அரசு விதிக்கக்கூடாது.

வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கைது செய்து அவர்களின் மனதை மேலும் புண்படுத்த வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

நினைவேந்தல் நிகழ்வைக் காரணம் காட்டி கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனது ஆட்சியில் நல்லாட்சி அரசில் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் பகிரங்கமாக நடத்த அனுமதி வழங்கியிருந்தேன். உயிரிழந்தவர்களை வைத்து இன ரீதியில் – மத ரீதியில் அரசியல் நடத்தும் நோக்கம் எனக்கு இருக்கவில்லை.” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
கையில் சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள்!

கையில் சிகிச்சைக்கு சென்ற சிறுமிக்கு நாக்கில் அறுவை சிகிச்சை செய்த வைத்தியர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு