உலக புகைத்தல் தடுப்பு தினத்தினை முன்னிட்டு விழிப்பூட்டல் செயலமர்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலக பிாிவுக்குட்பட்ட மகளீர் மகாசங்க உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிாிவு உத்தியோகத்தர்கள், சமுதாயம் சாா் சீா்திருத்த உத்தியோகத்தர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தாக்கங்கள், உள ரீதியான பாதிப்புக்கள், குடும்ப வன்முறைகள், விவாகரத்துக்கள் தொடர்பாக விரிவுரைகள் இடம்பெற்றதுடன் போதைப்பொருள் பாதிப்புக்கள் தொடர்பான பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.