பாதுகாப்பு படைகளின் பிரதானியாக ஜெனரல் சவேந்திர சில்வா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசி்ங்கவின் ஒப்புதலின் பேரில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த நியமனம் ஜூன் 1 முதல் டிசம்பர் 31, 2024 வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது.