சட்டவிரோதமாக மூன்று கொள்கலன்களில் கொண்டு வரப்பட்ட 66 மெட்ரிக் தொன் உளுந்து இலங்கை சுங்கத்தின் மத்திய சரக்கு ஆய்வுப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி உளுந்தே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் இறக்குமதிக் கட்டுப்பாட்டாளரின் அனுமதி அவசியம்.
இருப்பினும் குறித்த உளுந்து தொகுதி அனுமதி இல்லாமல் இறக்குமதி செய்யப்பட்டவை என தெரியவந்துள்ளது.