கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மயக்க மருந்து பற்றாக்குறையினால் சத்திரசிகிச்சைகளை இரத்து செய்ய நேரிட்டதாக நேற்று(14) அறிவிக்கப்பட்டது
Isoflurane மயக்க மருந்திற்கே தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் வைத்திய விநியோக பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய கருத்து தெரிவிக்கையில்
இந்த மயக்க மருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது