நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா, டெஸ்போட் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (14) முற்பகல் சுமார் 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த பேருந்தும், எதிர்த்திசையில் நுவரெலியாவிலிருந்து அக்கரபத்தனை நோக்கிப் பயணித்த மற்றுமொரு பேருந்தும் மோதிக்கொண்டதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 28 பேருக்கும் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







