Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் தூக்கி வீசப்பட்டு விபத்து!

திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் தூக்கி வீசப்பட்டு விபத்து!

2 years ago
in செய்திகள்

பிரதான மார்க்கம் மற்றும் மலையக மார்க்கத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று (16) காலை கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த ரயிலின் பிரதான கட்டுப்பாட்டாளர் தூக்கி வீசப்பட்டு விபத்து ஏற்பட்டுள்ளதால் அந்த ரயில் தற்போது கம்பஹா நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பிரதான மார்க்கத்தில் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

கனேமுல்ல – புலுகஹகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த ரயில் கட்டுப்பாட்டாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, தலவாக்கலை மற்றும் வடகொடை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் மலையக மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயிலே நேற்று (15) இரவு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரை செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையம் வரையும், பதுளையில் இருந்து கோட்டை வரை செல்லும் ரயில்கள் நானுஓயா ரயில் நிலையம் வரையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நிலையங்களுக்கு இடையில் பயணிகளை மாற்றுவதற்கு பேருந்துகள் பயன்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

June 18, 2026
செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
Next Post
திகிலிவெட்டை ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீ மிதித்தல்!

திகிலிவெட்டை ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தீ மிதித்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு