மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலமாக டெங்கின் தாக்கம் அதிகரித்துச் செல்வதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் டெங்கின் தாக்கம் தொடர்பான கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்தக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு – தற்போது டெங்கு தொடர்பான தாக்கம் மட்டக்களப்பின் கொக்குவில், சின்ன ஊறணி, வெட்டுக்காடு, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் காணப்படுகிறது. – என்றார்.
இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மஹேந்திரகுமார், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.