Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பறிமுதல்; இலங்கையர் உட்பட மூவர் கைது!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த கஞ்சா பறிமுதல்; இலங்கையர் உட்பட மூவர் கைது!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குக் கஞ்சா கடத்துவதற்காக இராமேஸ்வரம் தங்கும் விடுதியில் பதுங்கி இருந்த இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இலங்கை ரூபா நோட்டுகளைப் பறிமுதல் செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவுப் பொலிஸார் தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக நாட்டுப் படகுகளில் இலங்கைக்கு கஞ்சா, ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அதிகளவு கடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இராமேஸ்வரத்தில் தங்கி தனுஷ்கோடி கடல் வழியாகப் போதைப்பொருள் கடத்தல் தொழில் செய்வதற்கு இலங்கை புத்தளம் மாவட்டம், கற்பிட்டி யைச் சேர்ந்த அந்தோணி பிரவீன் (வயது 35) என்பவர் கடந்த மே மாதம் 31ஆம் திகதி விமான மூலம் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஜூன் முதலாம் திகதி காலை சென்னை வந்து இறங்கி பின்னர் அங்கிருந்து இராமேஸ்வரம் வந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

பின்னர் அவர் பெங்களூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள கஞ்சா வியாபாரிகள் பலரைச் சந்தித்து கஞ்சா கொள்முதல் செய்வதற்காக விசாரித்தார் என்று சொல்லப்படுகின்றது.

பின்னர் இராமேஸ்வரம், புதுரோடு பகுதியைச் சேர்ந்த உமா செல்வம் (வயது 45) என்பவர் மூலம் பேக்கரும்பு பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி தியாகராஜன் (வயது 57) என்பவரைச் சந்தித்து அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குப் படகு மூலம் கஞ்சா கடத்துவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார்.

இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு இராமேஸ்வரம் ஆய்வாளர் நல்லுசாமி மற்றும் காவலர் பால முரளி தலைமையிலான பொலிஸார் அந்தோணி பிரவீனை சுற்றிவளைத்து கைது செய்து அவர் தங்கி இருந்த அறையைச் சோதனை செய்த போது அவரிடம் இருந்து சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் இலங்கை ரூபா 50 ஆயிரம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கை நாட்டுப் படகில் இன்னும் ஓரிரு நாட்களில் சுமார் 400 கிலோ கஞ்சா பொட்டலங்கள் அடங்கிய மூட்டையை இலங்கைக்கு கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தியாகராஜன், உமா செல்வம் இருவரையும் கைது செய்த பொலிஸார், இலங்கையைச் சேர்ந்த அந்தோணி பிரவீன் உட்பட மூவர் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
Next Post
காத்தான்குடியில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை!

காத்தான்குடியில் உறுமய காணி உறுதிப்பத்திரம் வழங்குவதற்கான நடமாடும் சேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.