Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் தேசிய தலைவர் மீதும், தமிழ் மீதும் பற்றுடைய அனைவரும் எம்மோடு இணையவேண்டும்; இது கருணா அம்மான் காலம் என்கிறார் விநாயகமூர்த்தி முரளிதரன்!

தமிழ் தேசிய தலைவர் மீதும், தமிழ் மீதும் பற்றுடைய அனைவரும் எம்மோடு இணையவேண்டும்; இது கருணா அம்மான் காலம் என்கிறார் விநாயகமூர்த்தி முரளிதரன்!

2 years ago
in செய்திகள்

தமிழீழ தேசிய தலைவருடனும், தமிழ் மீதும் பற்றுடைய அனைவரும் எம்மோடு இணைய வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (11) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழீழ தேசிய தலைவரினால் இனங்காணப்பட்டு, கை காட்டப்பட்டு அரசியல் தலைவராக இருந்து இயற்கை எய்திய சம்பந்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுப்பெடுத்து நடத்துவார் என்ற நம்பிக்கையில் அவரிடம் கையளித்தார்.

இரண்டாம் கட்ட தலைவர் கூட இல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழரசு கட்சி அனைத்தும் இன்று சிதறடிக்கப்பட்டு இருக்கிறது.

உருளைக்கிழங்கு மூடை எல்லாம் கட்டவிழ்த்து அவிண்டு ஓடிட்டுது என்று கூறுகின்ற நடப்புக்களும் நடக்கிறது. தலைவர் பிரபாகரன் கூறிய வார்த்தையை தற்போது அமைச்சராக உள்ள டக்ளஸ் நையாண்டியாக கூறியிருந்தார்.

தமிழீழ தேசிய தலைவரால் கட்டப்பட்ட மூடை கட்டவிழ்ந்தது. உண்மை தான் அதனால் தான் அதனை கட்டுவதற்கு நான் வந்திருக்கின்றேன்.

இனி எங்களுக்கு கீழே வடக்கு கிழக்கு அரசியல் நடவடிக்கை நடைபெறும் என்பதனை ஆணித்தரமாக கூறிக்கொள்கின்றேன்.

15 வருடங்கள் நான் இருந்து பார்த்தேன். எங்களால் கையளிக்கப்பட்ட அரசியல் பிரிவு எங்கள் தலைவரால் மக்களின் எதிர்காலம், பொருளாதாரம், மக்களின் வாழ்வு என்பவற்றை 30 வருட கால யுத்தத்தின் பின்னர் வளர்த்தெடுக்கும் நிலையே இருந்தது. இங்கு திருடுவதும் சாப்பிடுவதுமான நிகழ்வுதான் நடந்ததே, இன்று கூட அவர்கள் பிரிந்து போகவே இருக்கின்றார்கள்.

தலைவரால் அவிழ்த்துவிடப்பட்ட மூடைகளை கட்டவேண்டிய கடப்பாடு எனக்கு மட்டுமே உள்ளது. இது கருணா அம்மான் காலம், எல்லோரும் எதிர்பார்த்திருங்கள்.

சிறிய அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள் என அனைவரும் எம்மோடு இணைய வேண்டும். தமிழ்தேசிய தலைவர் மீதும், தமிழ் மீது பற்றுடைய அனைவரும் எம்மோடு இணையவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு
செய்திகள்

டிரான் அலஸை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவு

October 1, 2026
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!
செய்திகள்

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு; புதிய வானிலை அறிவிப்பு!

October 1, 2026
நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!
செய்திகள்

நயினாதீவு அம்மன் ஆலயத்திலிருந்து அகண்ட தீபம் கொண்டு செல்ல 86 இந்திய யாத்திரிகர்கள் யாழ்ப்பாணம் வருகை!

October 1, 2026
வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு
செய்திகள்

வந்தாறுமூலையில் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு மட்டு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு

October 1, 2026
ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; கோட்டாபயவின் ரிட் மனு நிராகரிப்பு!

October 1, 2026
13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!
செய்திகள்

13 மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தியதால் அரசுக்கு ரூ. 5.7 பில்லியன் இலாபம்!

October 1, 2026
Next Post
சிசு செரிய போக்குவரத்து திட்டத்தை விரிவுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

சிசு செரிய போக்குவரத்து திட்டத்தை விரிவுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு