Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சட்டமூலங்களை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும்!

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சட்டமூலங்களை ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு கொண்டுவர வேண்டும்!

2 years ago
in அரசியல், செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளை எதிர்காலத்தில் தாங்கள் ஜனாதிபதியாக வந்தால் எதையெல்லாம் செய்வோம் என்ற வாக்குறுதிகளை மட்டும்தான் வழங்க முடியும். ஆனால் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு செயல்மூலம் சில விடயங்களை செய்துகாட்டமுடியும். எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சட்டமூலங்களையும் மிக விரைவாக பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா. சாணக்கியன் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று(10) புதன்கிழமை நடைபெற்ற மதுவரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்த அவர் மேலும் பேசுகையில்,

அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தபோது இந்த மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு தன்னால் எந்தத்தடையும் இல்லை என்று கூறினார். அவ்வாறானால் நாம் அவரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கின்றோம் .

மாகாண சபை முறைமையில் எல்லை நிர்ணயங்கள் என்ற விடயம் தற்போது வரை குழப்பகரமானதாக நீடித்துக் கொண்டிருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்வதற்கு சுமந்திரன் எம்.பி.யினால் ஒரு தனிநபர் பிரேரணை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகிவிட்டது .

சுமந்திரன் எம்.பி.யின் இந்த தனிநபர் பிரேரணையை அரசு ஒரு சட்டமாக முன்னெடுக்குமாக விருந்தால் இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கின்றார் என்றதொரு செய்தியை கொடுக்க முடியும்.

ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களுடைய நிலைப்பாடுகளை, எதிர்காலத்தில் தாங்கள் ஜனாதிபதியாக வந்தால் எதையெல்லாம் செய்வோம் என்ற வாக்குறுதிகளை மட்டும்தான் வழங்க முடியும்.ஆனால் தற்போது நாட்டின் ஜனாதிபதியாகவுள்ள ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு செயல் மூலம் சில விடயங்களை செய்துகாட்டமுடியும்.

அதேபோல்தான் மாகாண சபைகளிடமிருந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களைப்பற்றி ஆராய்வதற்காக பிரதமர் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.அதேபோல் தென் மாகாணத்திலிருக்கும் முன்னாள் மாகாண சபைகளின் முதலமைச்சர்கள் தயாரித்த அறிக்கை ஒன்றும் உள்ளது.

இந்த அறிக்கையூடாக தென் மாகாணத்தில் உள்ளவர்களும் இணங்கிய விடயங்கள் .

ஜனாதிபதி தற்போது 75 க்கும் மேற்பட்ட சட்டமூலங்களை சபையில் சமர்ப்பித்து நிறைவேற்றி வருகின்றார். அதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சட்ட மூலங்களையும் மிக விரைவாக பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தார் என்றால் ஜனாதிபதி அதிகாரத்தில் இருக்கும்போதே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர் தயாராக இருக்கின்றார் என்ற செய்தியை பொதுமக்களுக்கு சொல்லும் என்று மேலும் சுட்டிக்காட்டி இருந்தார்.

தொடர்புடையசெய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!
செய்திகள்

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறி குடிநீர் விற்பனை; பம்பலப்பிட்டி உணவகத்திற்கு ரூ.10 இலட்சம் அபராதம்!

October 1, 2026
ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை
செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மெய்ப்பாதுகாவலர் மீதான தாக்குதல்; ஊடகவியலாளர் பொலிஸ் பிணையில் விடுதலை

October 1, 2026
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு
செய்திகள்

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் O-நெகட்டிவ் வகை குருதிக்கு பாரிய தட்டுப்பாடு

October 1, 2026
கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு
செய்திகள்

கடற்படை சோதனையில் சட்டவிரோத பீடி இலைகள் மீட்பு

October 1, 2026
Next Post
குழந்தைகளிடையே இன்ஃப்ளுவன்சா பரவும் அபாயம்!

குழந்தைகளிடையே இன்ஃப்ளுவன்சா பரவும் அபாயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு