இந்தியன் 2 படத்திற்கு தடை கோரிய வழக்கில் கமல்ஹாசன் தரப்பில் ஆஜராகாவிட்டால் ஷங்கர் தரப்பில் ஆஜராவோரின் வாதத்தை பொறுத்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என மதுரை மாவட்ட நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியன் 2 படத்தில் வர்மக்கலை முத்திரையைத் தங்களைக் கேட்காமல் பயன்படுத்தியதாக் கூறி ராஜேந்திரன் என்ற நபர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் பழமையான வர்ம கலைக்கு இம்மனுதாரார் உரிமை கோர முடியாது என வாதாடினார்.