Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியை குறிவைக்கும் வலதுசாரி குண்டர்கள்!

லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியை குறிவைக்கும் வலதுசாரி குண்டர்கள்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவை நகரம் இன்று (07) புதன்கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் இஸ்லாமியர்ளை இலக்குவைத்து கடந்தவாரம் முதல் இடம்பெற்றுவரும் வன்முறைகள் தொடர்பாக இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை தடுத்து வைப்பதற்காக 500 க்கும் மேற்பட்ட மேலதிக சிறை அறைகள் ஒதுக்கபட்டுவருவதாகவும் வன்முறைகளை கட்டுப்படுத்த ஆறாயிரத்துக்கு மேற்பட்ட சிறப்புகாவற்துறையினர் களமிறக்கப்படுவார்கள் என அரசாங்கம் நேற்று (06) அறிவித்துள்ளது.

கடந்தவாரம் முதல் தலையெடுத்த இந்த வன்முறைகள் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு முதலாவது கடுமையான நெருக்கடியாக உருவாகியுள்ள நிலையில் நேற்றுமுன்தினம் (05) பெல்ஃபாஸ்ற் நகரில் நடத்தப்பட்ட இனவெறித்தாக்குதலில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேர்மிங்காம் நகரில் அதிதீவிர வலதுசாரிகள் குடியேறிகளுக்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தவுள்ளதாக நேற்று அணிவகுப்பு பற்றிய வதந்திகளையடுத்து பல வாகனங்களும் ஒரு மதுபானசாலையும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சவுத்போர்ட் நகரத்தில் கடந்தவாரம் மூன்று சிறுமிகள், 17 வயதான ஆயுதாரி ஒருவரால் கத்தியால் குத்திகொல்லப்பட்ட பின்னர் குறித்த தாக்குதலை செய்தவர் ஒரு முஸ்லிம் புகலிடக் கோரிக்கையாளர் என பரப்பட்ட வந்தியை அடுத்து வெடித்த இந்த வன்முறைகள் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எதிர்நோக்கும் முதலாவது கடுமையான நெருக்கடியாக உருவாகியுள்ளது.

இந்த நிலையில் லண்டனில் ஈழத்தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் ஒன்றான ஹரோவை நாளை (07) புதன்கிழமை இரவு 8 மணிக்கு அதிதீவிர வலதுசாரி குண்டர்கள் குறிவைக்கப்பொதான தகவல்கள் கிட்டியுள்ளதாக ஹரோ சட்ட மையத்தின் இயக்குனர் பமீலா ஃபிட்ஸ்பட்றிக் ஒரு தகவலை வெளியிட்டுள்ளாதால் அது குறித்த முன்னெச்சரிக்கைகள் சமூகவலைதளங்களில் பரவிவருகின்றன.

நேற்றிரவு பிளைமவுத் பகுதியில் காவற்துறையினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு உட்பட்ட வன்முறை தாக்குதல்கள் நடத்தபட்டதால் பல அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். பிளைமவுத் வன்முறைகள் தொடர்பாக இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிதானியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இதுபோன்ற மிக மோசமான வன்முறைகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: Battinaathamnewsinternationalnews

தொடர்புடையசெய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆப்பிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!
செய்திகள்

கிழக்கு உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை; கடும் மின்னல் தாக்கம் ஏற்படலாம்!

September 5, 2026
தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!
செய்திகள்

தொல்லியல் இடம் எனக் கூறி சட்டவிரோத கட்டிடம் அமைக்க முயற்சி?; அதிகாரிகளிடம் விளக்கம் கோரிக்கை!

September 5, 2026
ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்?

September 5, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க 450286 பேர் தகுதி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க 450286 பேர் தகுதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு