Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வொண்டர் வுமன் நாயகிக்கு வில்லியாக பாலிவுட்டில் ஆலியா பட்; வியப்பில் ரசிகர்கள்!

வொண்டர் வுமன் நாயகிக்கு வில்லியாக பாலிவுட்டில் ஆலியா பட்; வியப்பில் ரசிகர்கள்!

3 years ago
in சினிமா

ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளை தொடர்ந்து ஹாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார் நடிகை ஆலியா பட்.

ஹாலிவுட்டில் நடிகை பிரியங்கா சோப்ரா வில்லியாக டுவைன் ஜான்சனின் பேவாட்ச் படத்தின் மூலம் அறிமுகமானார். அவரைப் போலவே தற்போது நடிகை ஆலியா பட்டும் வில்லியாக வொண்டர் உமனாக நடித்து அசத்திய நடிகை கால் கடோட்டின் heart of stone என்னும் புதிய படத்தில் நடித்துள்ளார்.

இந்திய நடிகர்கள் தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில், ஆலியா பட் இந்த படத்தில் மிரட்டல் வில்லியாக நடித்து இந்திய ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.

ஆர்.ஆர்.ஆர் படத்தில் வெயிட்டான ரோல் என ஆலியா பட்டை புக் செய்து விட்டு பின்னர், அவரது போர்ஷனை டம்மியாக்கி விட்டார். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு தனது கதாபாத்திரம் இல்லை என்றும் எடுத்த காட்சிகளையும் எடிட்டிங்கில் தூக்கி விட்டார் என்பதால், ராஜமெளலி மீது ஆலியா பட் கோபமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்ற போது கூட ஆலியா பட் ஒரு வாழ்த்துக் கூட அந்த படக்குழுவினருக்கு தெரிவிக்கவில்லை என்றும் சர்ச்சை கிளம்பியது.

இந்நிலையில், ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகி உலக ரசிகர்களை மிரட்டி உள்ளது. வொண்டர் உமனாக நடித்து டிசி ரசிகர்களை கிறக்கமடைய வைத்த கால் கடோட் ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில் ஒரே ஒரு சீனுக்கு தனுஷ் போல வந்து செல்லாமல், மெயின் வில்லியாக ஆலியா பட் நடித்து மாஸ் காட்டி உள்ளார்.

பைக் ரைடு, ஸ்கை ஜம்ப் என காட்சிகள் கதிகலங்க வைக்கின்றன. ஆலியா பட் அந்த ஹார்ட் ஆஃப் ஸ்டோனை திருடுவதில் இருந்து தான் டிரெய்லர் சூடு பிடிக்கிறது.

இத்தனைக்கும் இந்த படத்தில் நடிக்கும் போது நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு சினிமா மீதான ஆர்வத்தால் ஆலியா பட் உயிரைக் கொடுத்து இந்த படத்தில் நடித்துள்ளார். நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 11ம் தேதி நேரடியாக இந்த படம் வெளியாகிறது.

தொடர்புடையசெய்திகள்

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்
சினிமா

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

May 18, 2026
ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்
சினிமா

ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்

April 14, 2026
விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு
சினிமா

விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு

April 10, 2026
“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை
காணொளிகள்

“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை

March 9, 2026
ஹோம் அலோன் திரைப்பட நடிகை காலமானார்
உலக செய்திகள்

ஹோம் அலோன் திரைப்பட நடிகை காலமானார்

January 31, 2026
“இந்த திமுகவை நம்பாதீர்கள்…!”புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்
அரசியல்

“இந்த திமுகவை நம்பாதீர்கள்…!”புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்

December 9, 2025
Next Post
சுட்டெரிக்கும் வெயிலால் 98 பேர் பலி!

சுட்டெரிக்கும் வெயிலால் 98 பேர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.