Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட சில மருந்துகளை மீளப்பெறும் நிறுவனம்!

இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட சில மருந்துகளை மீளப்பெறும் நிறுவனம்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

மருந்து தயாரிப்பு நிறுவனமான “அபோட்” குறித்து இந்தியாவில் சில புகார்கள் எழுந்த நிலையில், தனது பெனிசிலின் ஜி-வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளின் சில பிரிவுகளை திரும்பப்பெறுவதாக அது அறிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான அபோட், தாமாகவே முன்வந்து, பெனிசிலின் மருந்தான பென்டிட்ஸ் 800, பென்டிட்ஸ் 400, பென்டிட்ஸ் 200 ஆகிய மாத்திரைகளின் விற்பனை மற்றும் விநியோகத்தை நிறுத்துமாறு அறிவுறுத்தியிருக்கிறது. இவை, புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்ட, டிரக்ஸ் மற்றும் ஃபார்மாக்யூடிக்கல்ஸ் நிறுவனத்தின் (ஒப்பந்த அடிப்படையிலான தயாரிப்பு நிறுவனம்) மூலம் உற்பத்தி செய்யப்பட்டவை என்று கூறப்படுகிறது.

பென்டிட்ஸ் மருந்துகள், பாக்டீரியா தொற்றுக்காக பயன்படுத்தப்படுகிறது. நுரையீரல், தொண்டை, மூக்கு, தோல் போன்றவற்றில் ஏற்படும் தொற்றுகளை குணப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்படுகிறது. பென்டிட்ஸ் மாத்திரைகள் வழக்கமானதை விட சற்று அதிகக் காற்று அடைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகப் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, அவற்றை விற்பனை மற்றும் விநியோகம் செய்வதை நிறுத்துமாறு மொத்த விற்பனையகங்கள் மற்றும் மருந்துக் கிடங்குகளுக்கு அபோட் நிறுவனம் கடிதம் அனுப்பியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து உற்பத்தியாளர்கள் நிலையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, மருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் அதில் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதாவது, மாத்திரை வில்லைகள் இருக்கும் அட்டைகளில் காற்று அதிகம் நிரம்பி சற்று வீங்கியது போல இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

மூன்றாம் தரப்பு மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் இது பற்றி கேட்டிருப்பதாகவும் உடனடியாக அந்தப் பிரிவு மருந்துகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மாத்திரைகளை சாப்பிட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக எந்த புகாரும் இல்லை என்றும், இந்த நடவடிக்கை, அபோட் இந்தியா நிறுவனத்தின் மற்ற மருந்துகள் மற்றும் இதற்கு மாற்றாக இருக்கும் மருந்துகள் எதையும் பாதிக்காது என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!
செய்திகள்

வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்கு மகிழ்ச்சி; 2.5 இலட்சம் வேலைவாய்ப்புகள் இலக்கு!

July 23, 2026
Next Post
ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரை காணவில்லை; 23 பேர் குறித்து தகவலுமில்லையாம்!

ஜனாதிபதி வேட்பாளர்கள் மூவரை காணவில்லை; 23 பேர் குறித்து தகவலுமில்லையாம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு