Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு திராய்மடுவில் சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

மட்டு திராய்மடுவில் சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சிமிர்னா சிறுவர் அபிவிருத்தி திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (31) மட்டக்களப்பு – திராய்மடுவில் இடம்பெற்றது.

தலைமை போதகர் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டீனா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 10 கிராமங்களை உள்ளடக்கிய வறுமை கோட்டின் கீழ் வாழுகின்ற 5 வயது தொடக்கம் பல்கலைக்கழகம் செல்லும் வரைக்குமான சிறுவர்களுக்கு உதவிகள் வழங்கி அவர்களின் அறிவாற்றல், சமூக ரீதியான ஆற்றல், உடல் ரீதியான ஆற்றல் மற்றும் ஆன்மீக ரீதியான ஆற்றல் என்பவற்றில் சிறந்தவர்களாக இவர்களை மாற்றும் நோக்கிலேயே இத்திட்டமானது அமையப்பெறவுள்ளது.

இத் திட்டமானது சிறார்களை வறுமையில் இருந்து விடுவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

146 சிறுவர்கள் இத் திட்டத்தின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்களுக்காக இத்திட்டமானது 18 வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கெம்பஸ்ஷன் நிறுவனமானது இத்திட்டத்தின் அனுசரனையாளர்களாக செயற்படுகின்றதுடன்,
சிமர்னா திருச்சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தலைமை போதகர் எஸ்.ஜே.சில்வெஸ்டார், கெம்பஸ்ஷன் நிறுவனத்தின் பிரதிநிதி கஜாந்தன், தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஜெகநாதன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரி, சுகாதார பணிமனையின் உயரதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதிதிகள் சிறார்களின் பாண்டு வாத்திய இசை முழங்க மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன், சிறார்களின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, வரவேற்புரை, தலைமையுரை என்பவற்றினை தொடர்ந்து பிரதம அதிதி உள்ளிட்ட சிறப்பு அதிதிகளின் உரைகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்திசிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது
செய்திகள்

கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு ஐஸ் போதைப்பொருள் கடத்திய பெண் கைது

June 8, 2026
கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது
செய்திகள்

கரடியனாற்றில் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் 3 பேர் கைது

June 8, 2026
Next Post
போர்த்துகல்லில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழப்பு; உயிருடன் மீட்கப்பட்ட விமானி!

போர்த்துகல்லில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி 4 பேர் உயிரிழப்பு; உயிருடன் மீட்கப்பட்ட விமானி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு