Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நீதி கோரி போராட்டம்!

கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு முன்பாக நீதி கோரி போராட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என அழைத்துச் சென்று காணாமல் ஆக்கப்பட்ட 158 பேரின் 34 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (05) அனுஸ்டிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான நீதிகோரிய போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆந் திகதி கிழக்குப் பல்கலைக் கழக முகாமில் தஞ்சம்பெற்றிருந்தவர்களில் 158 பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டதில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்.

இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றிலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அ.அமலநாயகி, கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர் வி.கஜரூபன், சிவில் சமூக செயற்பாட்டாளர் திருமதி ரஜனி ஜெயபிரகாஸ், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் திட்டமுகாமையாளர் செல்வி நா.மிருஜா உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது பல்கலைக்கழக வளாகத்தின் முன் பாதாதைகளை ஏந்தியவாறு தமது உறவுகளுக்கு நீதி கோரி கவன ஈர்ப்புபேராட்டத்தில் ஈடுபட்டதுடன் உறவுகள் மற்றும் மாணவர்கள் காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம் மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலியும் செலுத்தினர்.

1990 -09-05 அன்று அகதி முகாமுக்குள் நுழைந்த இராணுவம் தங்களை அறிமுகப்படுத்தி பின்னர் ஒலிபெருக்கி மூலம் குறிப்பிட்ட வயதுடையவர்களை கிழக்கு பல்கலைக்கழக மைதானத்தில் ஒன்றுகூடுமாறு அறிவித்தல் விடுத்தனர்.

மைதானத்தில் வரிசையில் நிறுத்தப்பட்டவர்கள் இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்ட முகமூடி அணிந்த மனிதர்கள் முன் நிறுத்தப்பட்டு, தலையாட்டப்பட்டு காட்டப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் இந்த சம்பவம் நிகழ்ந்து 34 வருடங்கள் கடந்தும் தங்கள் அனுபவ ரீதியாக பலரும் நினைவுகூறுகிறார்கள்.

இது தொடர்பாக மட்டக்களப்பு சமாதான குழு பாதுகாப்பு அமைச்சு உட்பட பல்வேறு தரப்பினரிடம் முறைப்பாடு செய்தது.

செப்டம்பர் 5ஆம் திகதி அன்றைய தினம் 32 பேரை மட்டுமே விசாரணைக்காக கைது செய்து அழைத்துச் சென்றதாகவும், 24மணிநேரத்திற்குள் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள் எனவும் அவ்வேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராப் பதவிவகித்த எயர்மார்சல் பெர்னாண்டோ இதற்கான பதிலை அனுப்பியிருந்தார். இந்த பதிலை மட்டக்களப்பு சமாதானக் குழு நிராகரித்தது.

விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு மூன்றாம் நாள் செப்டம்பர் 8ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமுக்கு சென்று சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்காக கிழக்கு மாகாண இராணுவ தளபதியாக இருந்த ஜெரி சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு உயர்மட்டக் குழுவினரும் சென்றிருந்தனர்.

இராணுவத்தினரே எமது உறவுகளை அழைத்து சென்றதாக மக்களும் முகாம் பொறுப்பாளர்களும் இராணுவ உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவந்த வேளை கடும்தொனியில் இராணுவ அதிகாரிகள் பதிலளித்ததாக் கூறப்படுகிறது.

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காணமல் போனவர்களின் விசாரணைக்காக ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த ஆணைக்குழு முன்னிலையில் பலர் சாட்சியமளித்தனர்.

ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி கு.பாலகிட்ணர் தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் பொதுமக்கள் வழங்கிய சாட்சிகளின் அடிப்படையில் இராணுவத்தினரே செப்டெம்பர் 5ஆந் திகதி 158 பேரையும், 23ஆம் திகதி 16 பேரையும் கைது செய்து கொண்டு சென்றனர் என தெரிவித்திருந்தது.

எனினும் இதுவரையில் இவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கமுடியாத நிலையில் 34வது வருடமாக உறவுகள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!
செய்திகள்

வானில் பறக்கும் அதானியின் கனவு; புதிய விமான நிறுவனம் குறித்து ஆலோசனை!

July 23, 2026
சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்
செய்திகள்

சாந்த பண்டாரவின் மகனுக்கு 27ஆம் திகதி வரை விளக்கமறியல்

July 23, 2026
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்
உலக செய்திகள்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

July 23, 2026
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
உலக செய்திகள்

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

July 23, 2026
அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்
காணொளிகள்

அக்காலத்தில் போருக்கு ஆட்கள் சேர்த்துக்கொடுத்த இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு தீர்வு தராது-சுரேஸ்பிரேமச்சந்திரன்

July 23, 2026
கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!
செய்திகள்

கடலில் இருந்து ஏவுகணை ஏவி சீனா புதிய வரலாறு; 9 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில்!

July 23, 2026
Next Post
ஜனாதிபதி தேர்தலின் 2ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது!

ஜனாதிபதி தேர்தலின் 2ஆம் நாள் தபால் மூல வாக்களிப்பு மட்டக்களப்பில் நடைபெற்றது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.