Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விக்ரமின் மஹாவீர் கர்ணா திரைப்படம்; ஐந்து வருடங்களின் பின்னர் அப்டேட் கொடுத்த இயக்குனர்!

விக்ரமின் மஹாவீர் கர்ணா திரைப்படம்; ஐந்து வருடங்களின் பின்னர் அப்டேட் கொடுத்த இயக்குனர்!

3 years ago
in சினிமா

நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் 2 படம் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.

அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தின் சூட்டிங்கில் இணைந்து நடித்துவருகிறார் விக்ரம். இந்தப் படத்தின் சூட்டிங்கும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும்வகையில் அடுத்தடுத்த பிராஜெக்ட்களை தேர்ந்தெடுத்து நடிகர் விக்ரம் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் மற்றும் கோப்ரா படங்கள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு பூஜையும் போடப்பட்ட விக்ரமின் மஹாவீர் கர்ணா படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பூஜை கேரளாவின் பத்மநாப சாமி கோயிலில் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. வரலாற்றுப் படமாக திட்டமிடப்பட்டிருந்த மஹாவீர் கர்ணா படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரிலீசாக திட்டமிடப்பட்டிருந்தது.

மலையாள இயக்குநர் ஆர்எஸ் விமல் இந்தப் படத்தை இயக்கவிருந்தார். மேலும் இந்தப் படம் 32 மொழிகளில் டப்பிங் செய்யப்படவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் படத்தை 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். படத்திற்காக தன்னுடைய உடலை மாற்றிய விக்ரம், குதிரையேற்றத்திற்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களுடன் போர் காட்சிகளுக்காகவும் தயாராகியிருந்தார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவிருந்த இந்தப் படம் ஒருகட்டத்தில் சில காரணங்களால் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக இயக்குநர் ஆர்எஸ் விமல் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது இந்தப் படம் தடைகளை தாண்டி சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ஆர்எஸ் விமல் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்
சினிமா

விஜயின் தீர்மானத்தை விமர்சித்த விஷால்; அருண் விஜய் கண்டனம்

May 18, 2026
ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்
சினிமா

ஜனநாயகனை ஏப்ரல் 24 திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டம்

April 14, 2026
விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு
சினிமா

விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானது; அதிர்ச்சியில் படக்குழு

April 10, 2026
“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை
காணொளிகள்

“மட்டக்களப்பில் டீசல் வாகனங்கள் மண்ணெண்ணெயில் ஒடுகின்றது”;மீனவர்களுக்கு பாதிப்பு – சட்டநடவடிக்கை எடுக்குமாறு ஈ.பி.டி.பி கோரிக்கை

March 9, 2026
ஹோம் அலோன் திரைப்பட நடிகை காலமானார்
உலக செய்திகள்

ஹோம் அலோன் திரைப்பட நடிகை காலமானார்

January 31, 2026
“இந்த திமுகவை நம்பாதீர்கள்…!”புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்
அரசியல்

“இந்த திமுகவை நம்பாதீர்கள்…!”புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் விஜய்

December 9, 2025
Next Post
நாட்டில் மீண்டும் மலேரியா; சுகாதார பிரிவினர் எச்சரிக்கை!

நாட்டில் மீண்டும் மலேரியா; சுகாதார பிரிவினர் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு