ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 30 பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் மாயமாகியுள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இயங்கி வந்த நிலக்கரி சுரங்கதத்தில் 70 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, சுரங்கத்தில் மீத்தேன் கசிவு காரணமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால் 30 பேர் உயிரிழந்ததுடன் 17 பேர் பலத்த காயமடைந்துள்ளதுள்ளனர்.
மேலும், இவ்வெடி விபத்தில் 24 பேர் மாயமாகியுள்ளனர். இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.