Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசு கட்சியின் அழைப்பை பரிசீலனை செய்யும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை!

தமிழரசு கட்சியின் அழைப்பை பரிசீலனை செய்யும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை!

2 years ago
in செய்திகள்

இலங்கைத் தமிழரசு கட்சியின் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பரிசீலனை செய்வதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளர் ச.கீதன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில்,

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவாகியதன் பிற்பாடு புதிய அரசியல் கலாசாரத்திற்குள் தென்னிலங்கை செல்வதனை காணக்கூடியதாக இருக்கிறது.

இந்நிலையில் தமிழர்கள் அதற்கு ஏற்ற வகையிலும், அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் தமது அரசியல் தந்திரோபாயங்கள் மூலமாக தமிழர்களின் நீண்டகால அபிலாசைகளை நிறைவு செய்து கொள்ளக்கூடிய வழிமுறைகளை ஒற்றுமையுடன் கையாள வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை உணர்ந்து கொள்கிறது.

இந்நிலையில் தமிழர்கள் ஒரே அணியில் சாத்தியமான வழிமுறைகளுக்கூடாக நகர வேண்டிய தேவை உள்ள அதே நிலையில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ற வகையில் இளைஞர்களின் வகிபாகத்தை அரசியலில் உறுதிப்படுத்தி தொடர்ந்து வரும் ஜனநாயக வெளிகளை கையாள்வதற்கு இளைஞர்களை பலப்படுத்த வேண்டிய தேவையினையும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை நன்கு உணர்ந்து இருக்கிறது.

இந்த முக்கியமான காலப்பகுதியில் இலங்கைத் தமிழரசு கட்சியின் நேற்றுமுன்தினம்(28) மத்திய குழு கூட்டத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக பிரிந்து சென்றிருக்க கூடிய அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அறிவித்திருப்பதை நாம் வரவேற்கிறோம்.

அந்த வகையில் ஆளுமையுள்ள, ஊழலுக்கு எதிரான தமிழ்த் தேசிய சிந்தனையுடன் இளைஞர்களுக்கான சரியான வகிபாகங்களை வழங்கி புதிய அரசியல் வியூகங்களை வகுத்து செயற்பட தமிழரசு கட்சி தயாராக இருக்குமாக இருந்தால் அதன் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை சாதகமாக பரிசீலிக்க தயாராகவள்ளதாக தெரிவித்துள்ளார்.

IMG_20240929_0001Download
Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!
செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்!

September 16, 2026
“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

September 16, 2026
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்
செய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
Next Post
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு