Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு ரஜினியை பார்க்கும் ஃபீல்; ப்ரீ ரிலீஸில் சரிதா!

சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு ரஜினியை பார்க்கும் ஃபீல்; ப்ரீ ரிலீஸில் சரிதா!

3 years ago
in சினிமா

நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வரும் 14ம் தேதி தமிழ் மற்றம் தெலுங்கில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.

முன்னதாக வெளியான சிவகார்த்திகேயனின் டான், டாக்டர் படங்கள் நூறு கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன. ஆனால் கடந்த தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் சொதப்பியது.

இந்நிலையில் தற்போது ரிலீசாகவுள்ள மாவீரன் படம் தனக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று சிவகார்ததகேயன் நேற்று நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் -இயக்குநர் மடோன் அஸ்வின் கூட்டணியில் உருவாகியுள்ள படம் மாவீரன். இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவிருந்த நிலையில், அந்த மாதத்தில் ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தற்போது மாவீரன் படம் ஜூலை 14ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, தற்போது படத்திற்கான பிரமோஷன்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜூம் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, விரைவில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து படம் செய்யவுள்ளதாக தெரிவித்தார். மேலும் படத்தில் வில்லனாக கலக்கல் பர்பார்மென்ஸ் கொடுத்துள்ள மிஷ்கின், நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடித்துள்ள சரிதா உள்ளிட்டவர்களும் இந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசினர்

அப்போது பேசிய சரிதா, தான் ரஜினியுடன் படங்களில் நடித்துள்ளதாகவும், தன்னுடைய முதல் படமே ரஜினியுடன்தான் என்றும் மகிழ்ச்சி தெரிவித்தார். சிவகார்த்திகேயனை பார்க்கும்போது தனக்கு ரஜினியை பார்க்கும் ஃபீல் வருவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படத்தின் எடிட்டர் பிலோபின் ராஜூம் சிவகார்த்திகேயன் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். படத்தில் சிவகார்த்திகேயனின் ஆக்ஷன்கள் அதிரடியாக அமைந்துள்ளதாகவும் சண்டைக்காட்சிகளில் அவர் ஜாக்கிசானை நியாபகப்படுத்தியதாகவும் பாராட்டியுள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய மெரினா படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, மெரினா கடற்கரையில் 50 ரசிகர்களுடன் நடந்தது என்றும் தற்போது மாவீரன் படத்திற்கு இவ்வளவு அதிகமான ரசிகர்கள் வந்துள்ளது தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து டாக்டர், டான் படங்கள் வெற்றிபெற்று 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் பிரின்ஸ் படம் சொதப்பியதையும் சிவகார்த்திகேயன் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்

கடந்த படம் மிஸ் ஆயுடுச்சு, சாரி என்று என்று கூறிய சிவகார்த்திகேயன், ஆனா இந்த தடவை மிஸ்ஸே ஆகாது என்றும் கூறியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்நாக்ஸ் வழங்கப்பட்டிருந்தது. மேலும் நிகழ்ச்சி முடிந்து அவர்கள் அனைவரும் செல்லும்போது அவர்களுக்கு இரவு உணவும் கையில் கொடுத்து படக்குழுவினர் அனுப்பி வைத்தனர். படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அவர்களது எதிர்பார்ப்பை படம் கண்டிப்பாக பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

தொடர்புடையசெய்திகள்

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்
சினிமா

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்; திரையுலகில் பெரும் சோகம்

October 17, 2026
“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!
உலக செய்திகள்

“பிரேக்கிங் பேட்” நடிகர் ஆர்.ஜே. மிட்டே 34 வயதில் மரணம்!

October 13, 2026
சிகிச்சை நிறைவு; சுரேஷ் சலே இன்று மீண்டும் CID பொறுப்பில்
சினிமா

சிகிச்சை நிறைவு; சுரேஷ் சலே இன்று மீண்டும் CID பொறுப்பில்

October 6, 2026
“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!
சினிமா

“நான் இலங்கையர் அல்ல, ஈழத் தமிழர்”; ஹாலிவுட் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணனின் கருத்தால் கொதித்த சமூக வலைத்தள இனவாதிகள்!

September 24, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்
உலக செய்திகள்

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி 94 வயதில் காலமானார்

August 21, 2026
Next Post
வேறொரு நாட்டு கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி!

வேறொரு நாட்டு கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.